search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் சுதந்திர தினவிழா
    X

    அரசு பள்ளியில் சுதந்திர தினவிழா நடந்தது.

    திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் சுதந்திர தினவிழா

    • போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
    • 25 யூனிட் ரத்தம் பெறப்பட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் தலைமை தாங்கினார். தொடர்ந்து, ஆசிரியர்கள், மாணவர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் கொடியேற்று விழா நடைபெற்றது. பின்னர், போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து, தெற்கு வீதியில் உள்ள மணி ஆஸ்பத்திரியில் முன்னாள் ராணுவ வீரர்கள் முன்னிலையில் மணி ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் உதவியுடன் சங்க தலைவர் மாணிக்கவாசகம் தேசிய கொடி ஏற்றி வாழ்த்துரை வழங்கினார். இதில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அனைவருக்கும் டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று மாணவர்களுக்கு மணி ஆஸ்பத்திரி சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து, டெல்டா ரோட்டரி சங்க மருத்துவ சேர்மன் டாக்டர் பாபுவின் மணி ஆஸ்பத்திரியில் திருவாரூர் மருத்துவக்கல்லூரி உதவி யுடன் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 25 யூனிட் ரத்தம் கொடையாளர்கள் மூலம் பெறப்பட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதில் டெல்டா ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தலைவர் மாணிக்கவாசகம், செயலாளர் அகிலன், பொருளாளர் விஜய்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்

    Next Story
    ×