search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கர்நகரில் இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
    X

    முகாமில் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை நடத்தப்பட்ட காட்சி.

    சங்கர்நகரில் இந்தியா சிமெண்ட்ஸ் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

    • 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்நீர் அழுத்த நோய் பரிசோதனை நடத்தப்பட்டது.
    • 300 பயனாளிகளுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டது

    நெல்லை:

    இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் நெல்லை தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் சங்கர்நகர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.

    இந்தியா சிமெண்ட்ஸ் இணைத்தலைவர் (உற்பத்தி) பழனியப்பன் தலைமை தாங்கினார். மனிதவள துறை டாக்டர் குருசாமி, மக்கள் தொடர்பு அதிகாரி நாகராஜன், தலைமை ஆசிரியர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் கண்புரை நோயாளிகளை நெல்லை கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உள்விழி லென்ஸ் பொருத்தும் நவீன அறுவை சிகிச்சை, மருந்து, தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண்விழித்திரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து முகாமில் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்நீர் அழுத்த நோய் பரிசோதனை நடத்தப்பட்டது.

    மேலும் பிறவி கண்புரை, பிறவி கண்நீர் அழுத்த நோய், மாறுகண், மாலைக்கண் போன்ற பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு கண் மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் சுமார் 300 பயனாளிகளுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

    பரிசோதனையின் போது அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் உடனடியாக நெல்லை கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    Next Story
    ×