search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    650 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு
    X

    650 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு

    • தொட்டனுார் என்ற ஊரில் கோவில் நிலத்தில் உள்ள கல்வெட்டை படி எடுக்கப்பட்டது.
    • வரதராச பெருமாள் கோவில் மேற்கு நோக்கி மலையின் மேற்கு பக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் அறம் கிருஷ்ணன் கொடுத்த தகவலின்படி கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப் படுத்தும் குழுவும் இணைந்து, வரலாற்றுக் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மாரண்டபள்ளி பஞ்சாயத்தில், தொட்டனுார் என்ற ஊரில் கோவில் நிலத்தில் உள்ள கல்வெட்டை படி எடுக்கப்பட்டது.

    இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    கோவில் நிலத்தில் இந்த கல்வெட்டு இன்னும் கிராமத்து மக்கள் மெட்டுக்கால் அப்ப பெருமாள் என்று வழிபட்டு வருகின்றனர். இந்த பெயரே 650 ஆண்டுகள் பழமையானது என்பது கல்வெட்டு வாயிலாக தெரிய வருகிறது. கல்வெட்டில் பெரிதாக சக்கரம் வரையப்பட்டுள்ளது.

    அதன் இரண்டு பக்கமும் சந்திர சூரியனும், சக்கரத்தின் அருகே சங்கும், குத்து விளக்கும் காணப்படுகிறது. இந்த பஞ்சாயத்தின் பெயரான மாராண்டப்பள்ளி 650 ஆண்டுகளுக்கு முன் முடமாராண்டான்பள்ளி என்பதும், இக் கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது.

    இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்படாத பலகை வாவிபற்று விஜயநகர மன்னர் வீர கம்பன உடையார் காலத்தில் இருந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. பற்று என்பது நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட பகுதி. தற்போதுள்ள தாலுக்கா போன்ற ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. கல்வெட்டில் அஸ்தகிரியில் உள்ள வரதராச பெருமாள் கோவிலுக்கு கொடுக்கப்பட்ட தானத்தைப்பற்றி கூறுகிறது.

    தற்போதுள்ள சூளகிரி 650 ஆண்டுகளுக்கு முன் அஸ்தகிரி என்று அழைக்கப்பட்டு வந்திருக்கி றது. தற்போதும் அந்த சூளகிரியில் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள வரதராச பெருமாள் கோவில் உள்ளது.

    அஸ்தகிரி என்பது சூரியன் மறையும் மலை என்பதற்கு ஏற்ப வரதராச பெருமாள் கோவில் மேற்கு நோக்கி மலையின் மேற்கு பக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுப்பணியில், சரவணக்குமார், ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், கிராமத்தைச் சேர்ந்த மாரப்பகவுடா ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×