search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையப்பர் கோவில்  தேரோட்ட ஏற்பாடுகள் தீவிரம்- மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கம்
    X

    தேரை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்ற போது எடுத்தபடம்.

    நெல்லையப்பர் கோவில் தேரோட்ட ஏற்பாடுகள் தீவிரம்- மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கம்

    • கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தாண்டு தேரோட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது.
    • தேரோட்டத்தையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று நெல்லையப்பர் கோவில்.

    ஆனித்தேரோட்டம்

    நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேர்திருவிழா விமரிசையாக நடைபெறும். கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தாண்டு தேரோட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது.

    இந்த ஆண்டு ஆனித்தோரட்டம் வருகிற 3-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

    விடுமுறை

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நான்கு ரத வீதிகளில் தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    தேர்ச்சக்கரம்

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இருந்து இரும்பு சக்கரங்கள் வரவழைக்கப்பட்டு தேருக்கு பொருத்தப்பட்டு உள்ளது.

    தீயணைப்புத்துறை சார்பில் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் உள்ளிட்ட 5 தேர்களையும் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது.

    திருவிழா நாளில் தினமும் சப்பரபவனி ரதவீதிகளில் நடைபெறும். இதனால் வாகனங்கள் ரதவீதிகள் வழியாக செல்லாத வண்ணம் தற்போதே வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    போக்குவரத்து மாற்றம்

    அதன்படி நெல்லையப்பர் கோவிலின் முன் உள்ள அனுப்பு மண்டபம் முன்பு தடுப்பு கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.

    இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் சொக்கப்பனை முக்கு வழியாக மவுண்ட்ரோடு சென்று காட்சி மண்டபம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோரிக்கை

    பாரதியார் பள்ளி அமைந்துள்ள சாலையில் பாதாளசாக்கடை திட்டத்திற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகிறார்கள்.

    எனவே அப்பாதையை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வடக்கு ரதவீதியில் சாலையில் கழிவுநீர் சென்றுவருவதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×