search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில்  மாணவிகள் விடுதியில் உணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா?  கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
    X

    கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில் ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா அங்கு தங்கியுள்ள மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்த போது எடுத்தபடம்.

    கடலூரில் மாணவிகள் விடுதியில் உணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா? கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

    • கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
    • அங்கு மாணவிகளுக்கு தயார் செய்து வழங்கப்படும் உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்ட பணிகளையும், பல துறைகளின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா இன்று காலை கடலூர் வருகை தந்தார். அவர் கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மாணவிகளுக்கு தயார் செய்து வழங்கப்படும் உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார்.

    கல்லூரியில் தனி அறையில் நூலகம் அமைத்து பராமரிக்கும் படியும், இ-நூலகத்தை விரைவில் தொடங்கவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து கல்லூரி விடுதி வளாகம், மாணவிகள் தங்கும் அறை உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டு அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறதா? என மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கூடுதல் கலெக்டர் மதுபாலன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×