என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடம்பூர் - புளியம்பட்டி - தெய்வசெயல்புரம் வரையிலான சாலையை விரிவுபடுத்த வேண்டும் - சட்டசபையில் சண்முகையா எம்.எல்.ஏ. கோரிக்கை
- புளியம்பட்டி புனித அந்தோணியார் கோவிலுக்கு தினமும் அதிகப்படியான பக்தர்கள் வருகை தருவதால் வாகனம் விலகுவதற்கு சிரமம் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.
- தொகுதி மக்கள் நலன் கருதி இந்தச் சாலையை 5.50 மீட்டர் முன்னுரிமை அடிப்படையில் அகலப்படுத்தி தருமாறு சண்முகையா எம்.எல்.ஏ கோரிக்கை வைத்தார்.
ஓட்டப்பிடாரம்:
சட்டப் பேரவையில் நேற்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பேசுகையில், கடம்பூர் - புளியம்பட்டி - தெய்வசெயல்புரம் வரையிலான சாலை 3.75 மீட்டர் அகலமும் 12 கிலோமீட்டர் தூரமும் சாலை அமைக்கப் பட்டுள்ளது. இந்தச் சாலை வழியாக புளியம்பட்டி புனித அந்தோ ணி யார் கோவிலுக்கு தினமும் அதிகப்படி யான பக்தர்கள் வருகை தருவதால் வாகனம் விலகுவதற்கு சிரமம் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. தொகுதி மக்கள் நலன் கருதி இந்தச் சாலையை 5.50 மீட்டர் முன்னுரிமை அடிப்படையில் அகலப்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தார்.
இதற்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளிக்கையில், கடம்பூர்- புளியம்பட்டி - தெய்வச்செயல்புரம் முக்கியமான சாலை என்பதால் சாலை விரிவு படுத்த மானிய கோரிக்கை முடிந்தவுடன் திட்ட மதிப்பீடு தயார் செய்து இந்த நிதி ஆண்டிலே செப்பனிடப்படும் என்றார்