search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காடையாம்பட்டி யூனியன் கூட்டம்
    X

    காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    காடையாம்பட்டி யூனியன் கூட்டம்

    • 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
    • மன்ற கூட்டத்தில் ஏன் தீர்மானம் வைக்கப்படவில்லை?

    காடையாம்பட்டி

    சேலம் மாவட்டம் காடை யாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள் ரவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய ஆணையாளர் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணைத் தலைவர் மகேஸ்வரி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

    ரமேஷ் (அதிமுக)- பண்ணபட்டி ஊராட்சி மாந்தோப்பு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இந்தப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து இடிக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் தொட்டியை இடித்து விட்டால் மக்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பதால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரியை சந்தித்து கோரிக்கை விடுத்து மன்ற தீர்மானம் பெற்று தந்தால் சிறப்பு நிதி ஒதுக்கி தருவதாக தெரிவித்தனர். இது குறித்து மன்ற கூட்டத்தில் ஏன் தீர்மானம் வைக்கப்படவில்லை?

    மாரியம்மாள் (ஒன்றிய குழு தலைவர்)- என்னிடம் தீர்மானம் வைத்துக் கொடுக்க கேட்காததால் வைக்கவில்லை.வெங்கடேசன் (அதிமுக)- கொங்குபட்டி பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதம் அடைந்து பல மாதமாக இடித்து அகற்றி கொடுக்க கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    ரவிச்சந்திரன் (வட்டார வளர்ச்சி அலுவலர்)- நிதிபற்றாக்குறை உள்ளதால் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட முடியாத நிலையில் பழுதடைந்ததை கணக்கெடுத்து கொடுத்தால் அதிகாரிகளை பார்த்து சிறப்பு நிதி பெறலாம்.

    சாமுராய் குரு (விடுதலை சிறுத்தைகள் கட்சி)- காடையாம்பட்டி ஒன்றியத்தில் ஒப்பந்ததா ரர்கள் சங்கம் ஆரம்பித்து கொண்டு அவர்கள் சங்கம் மூலம் தான் வேலை கொடுக்க வேண்டும் என்கின்றனர். அவ்வாறு கொடுத்த பணியை விரைவாக முடிப்பதில்லை. சங்கத்திற்கு இங்கு வேலை இல்லை. கவுன்சிலர்களும் அதிகாரிகளும் சேர்ந்து தான் முடிவு செய்ய வேண்டும். வேறு எங்குமே சங்கம் இல்லை. இதற்கு அதிகாரிகள் அவர்களுக்கு செவி சாய்க்கக் கூடாது.

    பழனிவேல் (திமுக)- ஒன்றிய நிதியில் கொசு மருந்து அடிக்க சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் எங்கு வேலை செய்கிறார்கள்? மருந்து அடிக்கிறார்களா? இல்லையா? என்பது கூட தெரிவதில்லை.ராமச்சந்திரன் (வட்டார வளர்ச்சி அலுவலர்)- கொசு மருந்து அடிக்கும் பணியாளர்கள் அங்குள்ள வார்டு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இடம் கையொப்பம் பெற்று வரும்படி கூறிவிடலாம்.இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.

    Next Story
    ×