search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
    X

    கோப்பு படம் 

    இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ராதிகா என்பவர் தனது குடும்பத்திற்காக ஒரு தனியார் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார்.

    அதன் பின்னர் அவரது கணவர் உடல்நலக்குறை வால் பாதிக்கப்பட்டு நாகர்கோவிலுள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் பணம் செலுத்தி சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பின்னர் இந்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.

    இதைக் கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர் வோருக்கு சிகிச் சைக்காக ஏற்கனவே செலவழித்த ரூ.59,693, நஷ்டஈடு ரூ.20ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.84,693 ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் உத்தர விட்டனர்.

    Next Story
    ×