search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்க குமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும்
    X

    விஜய் வசந்த் எம்.பி. பேசிய போது எடுத்தப்படம்.

    கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்க குமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும்

    • ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தல்
    • ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கும் 35 மீட்டர் அளவு கொண்ட படகுகளை பதிவு செய்ய மீன்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு அரசு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இந்திய கடலோர காவற்படை சார்பில் மீனவர் ஒருங்கிணைப்பு கூட்டம் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நடந்தது. விஜய் வசந்த் எம்.பி. தலைமை தாங்கினார். தூத்துக்குடி நிலைய இந்திய கடலோர காவல்படை தளபதி வினோத் குமார் முன்னிலை வகித்தார்.துணை தளபதி சாஜூ செரியன், குளச்சல் மீன் துறை உதவி இயக்குனர் நடராஜன் ஆகியோர் பேரிடர் காலத்தில் மீனவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டிய உபகரணங்களை செயல்முறை மூலம் விளக்கி பேசினர்.

    தொழிலுக்கு செல்லும் போது கட்டாயம் பாதுகாப்பு உபகரணங்களை மீனவர்கள் எடுத்து செல்ல வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    அப்போது குளச்சல் விசைப்படகு சங்க தலைவர் வர்க்கீஸ், செயலாளர் பிராங்கிளின், நகர்மன்ற கவுன்சிலர் ஜாண்சன், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ், முன்னாள் தலைவர் ஆனந்த், மாநில காங்.செயற்ழு உறுப்பினர் யூசுப்கான், நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர் சிபு ஆகியோர் கடலில் மாயமாகும் மீனவர்களை துரிதமாக மீட்க குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    குளச்சல், முட்டம், கன்னியாகுமரி ஆகிய பகுதியில் சுமார் 1000 விசைப்படகுகள் மீன் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை.ஆழ்கட லில் தங்கி மீன் பிடிக்கும் படகுகள் 35 மீட்டர் அளவு கொண்டவை.இந்த வகை படகுகளை பதிவு செய்யவும் மீன்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

    இதற்கு பதிலளித்து விஜய்வசந்த் எம்.பி. பேசியதாவது:-

    குமரி மாவட்ட கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.கன்னியாகுமரியில் விரைவு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் வசதியுடன் கடலோர காவல் படை நிலையம் அமைக்க வேண்டும் என கடலோர காவல் படையின் கூடுதல் இயக்குனரை சந்தித்து மனு அளித்துள்ளேன்.இவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய ஆய்வு நடத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளேன் என்றார்.

    கூட்டத்தில் குளச்சல் மீனவர் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் ஆன்றனி, மாவட்ட காங்.துணைத்தலைவர்கள் முனாப், தர்மராஜ், அகில இந்திய இளைஞர் காங்.ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், மீனவர் காங்.நிர்வாகிகள் ஜோசப்மணி, ஸ்டார்வின், லாலின், இளைஞர் காங்.நிர்வாகிகள் டைசன் ஜேக்கப், திங்கள்நகர் பேருராட்சி தலைவர் சுமன் உள்பட மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×