search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே பெண் மீது சரமாரி தாக்குதல்
    X

    கோப்பு படம் 

    மார்த்தாண்டம் அருகே பெண் மீது சரமாரி தாக்குதல்

    • மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • சொத்து பிரச்சனையில் போலீசார் பெண்ணை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட விரிகோடு, பாண்டியன் விளையை சேர்ந்தவர் செந்தில் குமார் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சீமா.

    இவர் திக்குறிச்சியில் தனக்கு சொந்தமான நிலத்தில் புதிதாக வீடு கட்டுவதற்காக வேலை ஆட்களை வைத்து அதில் நின்ற மரங்களை அப்புறப்படுத்திக் கொண்டி ருந்தார். அப்போது மார்த்தாண்டம் போலீசார் மற்றும் பலர் சேர்ந்து அங்கு சென்று இந்த பகுதியில் வேலை செய்ய கூறியது யார் என கேட்டு தகராறில் ஈடுபட்டு சீமாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது செல்போனையும் பறித்து சென்றதாக தெரிகிறது.

    இதற்கு அந்த பெண் தரப்பில் ஏன் எதற்காக வேலையை தடுக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு உன்னிடம் கூற தேவையில்லை என கூறி கூட்டாக தாக்கியதாக கூறப்படுகிறது. அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்ததை தொடர்ந்து தாக்குதலில் காயம் அடைந்த சீமா மயங்கி கீழே விழுந்துள்ளார்.

    இதையடுத்து அங்கு பொதுமக்கள் கூடியதை தொடர்ந்து, போலீசாரும் அந்த கும்பலும் அங்கிருந்து சென்று விட்டனர். இதை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சீமாவை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள னர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவி லில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சொத்து பிரச்சனையில் போலீசார் பெண்ணை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து சீமா மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் முதல்-அமைச்சர் ஆ கியோருக்கு புகார் அனுப்பியுள்ளார்.

    Next Story
    ×