search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு
    X

    கோப்பு படம் 

    நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு

    • போலீசாருக்கும் ஆட்டோ டிரைவருக்கும் இடையே வாக்குவாதம்
    • போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோவை நிறுத்தி இருந்ததாக ரூ.2 ஆயிரம் அபராதம் விதிப்பு.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்துக்கு இடை யூறாக நிற்கும் வாகனங்க ளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பீச் ரோடு பகுதியில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஆட்டோ டிரைவர் காந்தி என்பவர் தனது ஆட்டோவை அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் முன்பு நிறுத்தி இருந்தார்.போக்குவரத்துக்கு இடை யூறாக இருப்பதாக கூறி போலீசார் அந்த ஆட்டோவை அங்கிருந்து ஓரமாக நிறுத்துமாறு கூறிய தாக தெரிகிறது.அப்போது போலீசாருக்கும் ஆட்டோ டிரைவர் காந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது.

    இதையடுத்து போக்கு வரத்துக்கு இடையூறாக ஆட்டோவை நிறுத்தி இருந்த தாக காந்திக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதை கண்டித்து ஆட்டோ டிரைவர் காந்தி தனது மனைவி மகனுடன் மாலையில் பீச் ரோடு சந்திப்பில் மண்எண்ணை கேனுடன் வந்து நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் தற்கொலை செய்து கொள்ளப் போவ தாகவும் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதற்கு இடையில் அங்கு போக்குவரத்து பணியில் இருந்த போக்குவரத்து பிரிவு போலீஸ்ஏட்டு முத்து சங்கர் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆட்டோ டிரைவர் காந்தி மீது கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    இது குறித்து ஆட்டோ டிரைவர் காந்தி மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×