என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பயிர்கள் கருகுவதால் சிற்றாறு கால்வாயில் தண்ணீர் திறக்காவிட்டால் முற்றுகை போராட்டம்
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவிப்பு
- விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, மரச்சீனி, மிளகு, கத்தரி, பயறு வகைகள் போன்ற பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டணம் கால்வாய்க்கு சிற்றாறு அணையில் இருந்து சிற்றாறு பட்டணங்கால் பிரிவு பிரதான கால்வாய் குலசேகரம், தும்பகோடு பகுதியில் தொடங்கி மாத்தூர், திருவட்டார், பள்ளியாடி வழியாக முள்ளங்கினாவிளை வந்து சேரும். அங்கிருந்து கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட புதுக்கடை பிரிவு, கருங்கல் பிரிவு என இரண்டாக பிரிகிறது.
பட்டணம் கால்வாயின் கிளை கால்வாய்களில் வரும் தண்ணீரால் அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் பயன்பட்டு வருகின்றனர். தற்போது சிற்றாறு பட்டணம் கால்வாயின் கிள்ளியூர் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட கடைவரம்பு பகுதிகளான கருங்கல், பாலூர், சுண்டவிளை, தேவிகோடு, பூட்டேற்றி, மீறி, தேங்காப்பட்டணம் வரையும் உள்ள சிற்றாறு பட்டணம் கால்வாயில் மேற்கண்ட பகுதிகளில் கால்வாயில் கடைவரம்பு பகுதிகளில் கடந்த பல வருடங்களாக பொதுப்பணித்துறை நீராதார அமைப்பு அதிகாரி களின் அலட்சியத்தால் கடைவரம்பு பகுதிகளில் சரியான முறையில் தூர்வாரமல் கால்வாய்க ளில் சுமார் 2 அடிக்கும் மேல் மண் நிறைந்து காணப்படுகிறது.
மேலும் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட மத்திகோடு ஊராட்சி, பாலப்பள்ளம் பேரூராட்சி போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன் பெறும் திக்கணங்கோடு திருவிதாம்கோடு கிளை கால்வாய் வழுதலம்பள்ளம் வரை பல ஆண்டுகளாக சரியான முறையில் தூர்வாரமல் மண் நிறைந்து காணப்படுகிறது. இதனால் கடை வரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. சிற்றாறு பட்டணங்கால் வாய் மற்றும் திக்கணங் கோடு கால்வாய் ஆகிய 2 கால்வாய்களிலும் கடந்த 2 மாதங்களாக திடீரென்று தண்ணீர் நிறுத்தப்பட் டுள்ளது.
இதனால் இப்பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, மரச்சீனி, மிளகு, கத்தரி, பயறு வகைகள் போன்ற பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. கால்வாய்க்குட்பட்ட பகுதிகளில் உள்ள 100 -க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீர் இல்லாமல் கணப்படுகிறது.
ஆனால் பட்டணம் கால்வாய் மற்றும் திக்க ணங்கோடு கால்வாய்களில் தண்ணீர் திறப்பது பற்றி பொதுபணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் சரியான பதிலை தரவில்லை. ஆகவே உடனடி யாக பட்டணம் கால்வாய் மற்றும் திக்க ணங்கோடு கால்வாய் பகுதிகள் மற்றும் இடிந்து விழுந்த திக்கணங்கோடு கோட்ட விளை பகுதியையும் மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து கரையில் உடைப்பு ஏற்பட்ட இடங்க ளையும் சரி செய்து மேற்குறிப்பிட்ட 2 கால்வாய்களிலும் கடைவரம்பு பகுதிகள் வரை தூர்வாரி சீரமைத்து 5 தினங்களுக்குள் 2 கால்வாய்களி லும் கடைவரம்பு பகுதிகள் வரை தண்ணீர் விட மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும்.தவறும்பட்சத்தில் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளையும், பொதுமக்களையும் ஒன்று திரட்டி எனது தலைமையில் நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்