என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை பந்தல்கால் நாட்டு விழா
- கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.
- இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மாசிக்கொடை விழா வரும் மார்ச் 5-ந் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 14-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி கொடை பந்தல் கால் நாட்டு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடந்தது. பந்தல்கால் நாட்டுவிழாவை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு திரு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு மேல் நிறை புத்தரிசி பூஜை, 8.45 மணியளவில் பந்தல்கால் நாட்டு விழா நடந்தது.
இதில் அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோ வில் மாநகராட்சி மேயர் மகேஷ், குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாக இணை ஆணையர் ஞானசேகர், ஸ்ரீகாரியம் செந்தில்குமார், மராமத்து பொறியாளர் அய்யப்பன், பெரிய சக்கர தீவெட்டி குழு தலைவர் முருகன், குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர், ஓன்றிய தி.மு.க. செயலாளர்கள், சுரேந்திரகுமார், பேருர் செயலாளர்கள் சுஜெய் ஜாக்சன், ரெஜிலின் ராஜகுமார், குளச்சல் நகர செயலாளர் நாகூர்கான், குளச்சல் சபீன், மண்டைக்காடு பேரூராட்சி கவுன்சிலர்கள் ராபர்ட் கிளாரன்ஸ், சோனி, ஹைந்தவ சேவா சங்க தலைவர் கந்தப்பன், பொதுச்செயலாளர் ரெத்னபாண்டியன், செயலாளர் முருகன், செயற்குழு உறுப்பினர் வைகுண்டராஜன், வேலாயுத விமல குமார், கோபாலகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சமய மாநாடு திடலில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 86 வது சமய மாநாடு பந்தல்கால் நாட்டு விழா நடந்தது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மதியம் 1 மணிக்கு உச்ச பூஜை, தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு அம்மன் தங்க ரதத்தில் திரு வீதி உலா, 6.15 க்கு திருவிளக்கு பூஜை, 6.45 க்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடக்கிறது.
மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை பந்தல்கால் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மனோதங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மண்டைக்காடு பகவதி யம்மன் திருக்கோயிலில் புனரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மாசிக்கொடை திருக்கொடியேற்றத்திற்கு முன்பு பணிகளை நிறைவு செய்ய முயற்சி நடக்கிறது. திருப்பணிகளை பழமை மாறாமல் செய்ய வேண்டும். இது கைவினை கலைஞர்களின் நுட்பமான பணி.மாசிக்கொடைக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தருகிறார். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.பாரதிய ஜனதாவின் சவாலை தி.மு.க. சந்திக்கும். தி.மு.க. கொள்கை அடிப்படையில் கூட்டணி வைத்துள்ளது. தேர்தலுக்காக கூட்டணி வைக்கவில்லை. பாரதிய ஜனதா நம்பிய வர்களை கழுத்தறுக்கும் கட்சி. உதாரணத்திற்கு மகாராஷ்டிராவில் சிவ சேனாவை கழுத்தறுத்தது.பாரதிய ஜனதா பாவமன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்