search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருட்டு
    X

    கோப்பு படம் 

    நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருட்டு

    • போலீஸ் சீருடையை மாற்றிவிட்டு வேறு உடையில் தப்பிசென்ற வாலிபர்
    • சி.சி.டி.வி. காட்சியில் உருவம் சிக்கியது

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் தெற்கு திருப்பதி சாரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பெர்னாட். இவர் நாகர்கோவில்-நெல்லை நான்கு வழிச்சாலையில் திருப்பதி சாரம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று பெர்னாட் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக தயாரானார். அப்போது போலீஸ் சீருடை அணிந்து வந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை கடையின் முன்பு நிறுத்தினார். தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் காலியாகி விட்டதாகவும் கூறினார்.

    பெர்னாட்டிடம் மோட்டார் சைக்கிளை தந்தாள் பெட்ரோல் வாங்கிவிட்டு வந்து விடுவதாக தெரிவித்தார் அந்த நபர். போலீஸ் சீருடை அணிந்திருந்ததால் பெர்னாட் தனது மோட்டார் சைக்கிளை அவரிடம் கொடுத்து அனுப்பினார். நீண்ட நேரம் ஆகியும் அந்த நபர் வரவில்லை.

    இதையடுத்து வடசேரி போலீசில் புகார் செய்தார்.வடசேரி போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் சீருடையில் சென்ற வாலிபர் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது.

    பெர்னாட்டின் மோட்டார் சைக்கிள் எடுத்துச்சென்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.மேலும் வடசேரி, நாக்கால் மடம், திருப்பதிசாரம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது.

    அப்போது வாலிபர் ஒருவர் சாதாரண உடையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. போலீஸ் சீருடையில் யாரும் செல்லவில்லை. எனவே அந்த வாலிபர் போலீஸ் உடையை மாற்றி விட்டு சாதாரண உடையில் தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கிறார்கள். எனவே சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×