search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு
    X

    திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை படத்தில் காணலாம்

    குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு

    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    • சிற்றாறு-I பகுதியில் அதிகப்பட்சமாக 12.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக லோசன மழை பெய்து வருகிறது.

    மாவட்டத்தில் சிற்றாறு-I பகுதியில் அதிகப்பட்சமாக 12.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பேச்சிப்பாறையில் 11.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சிற்றாறு-II, குழித்துறை, களியல், பூதப்பாண்டி, பெருஞ்சாணி, தக்கலை, குருந்தன்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

    மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தின் பிரதான அணையான சிற்றாறு-I பகுதியில் அதிகப்பட்சமாக 12.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.அணைக்கு 1054 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 788 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.72 அடியாக உள்ளது. அணைக்கு 195 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 49.38 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 20.80 அடியாகவும், சிற்றாறு-I அணை நீர்மட்டம் 13.99 அடியாகவும், சிற்றாறு-II அணை நீர்மட்டம் 14.01 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 17.90 அடியாகவும் உள்ளது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    சிற்றாறு-I-12.4, பூதப்பாண்டி-1.4, களியல்-2, குழித்துறை-4, பேச்சிப்பாறை-11.8, பெருஞ்சாணி-4, சிற்றாறு-II-9.2, தக்கலை 2,மாம்பழத்துறையாறு-1, குருந்தன்கோடு 8.4.

    Next Story
    ×