search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
    X

    கோப்பு படம் 

    நாகர்கோவிலில் வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
    • ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 5 இடங்களில் நெடுஞ்சாலைரோந்து படை போலீசார் கண்காணிப்பு பணி

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். காலை, மாலை நேரங்களில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டு உள்ளது .

    குட்கா, கஞ்சா விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலை ரோந்து படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 5 இடங்களில் நெடுஞ்சாலைரோந்து படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிமுறைகளை மீறு வோருக்கு அபராதம் விதிக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் வாகன ஓட்டிகளிடம் பணம் பெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து அவரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்கியதாக சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×