search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே புற்றுநோய் கண்டறியும் திட்ட தொடக்க விழா
    X

    திருவட்டார் அருகே புற்றுநோய் கண்டறியும் திட்ட தொடக்க விழா

    • ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் நோயில் இருந்து காத்துக் கொள்ளலாம்
    • கலெக்டர் ஸ்ரீதர் பேச்சு

    திருவட்டார் :

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் சமுதாய அளவி லான புற்று நோய் கண்டறி யும் திட்ட தொடக்க விழா குமரி மாவட்டம் பொன்மனை பேருராட்சி யில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-

    சமூக அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் முதன் முறையாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படு கிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்றாகும்.

    தமிழ்நாடு புற்றுநோய் ஆராய்ச்சி கழகம் 2017-ம் ஆண்டு நடத்திய மாநில அளவிலான ஆய்வில் 69,517 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் 12-ல் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆண்களில் 14.6 சதவீதம் பேர் வாய் பகுதி புற்றுநோயால் பாதிக்கப்படுவதும், பெண்களின் 33.6 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    18 வயது நிரம்பிய ஆண்களும் பெண்களும் வாய் பகுதி புற்று நோய்க்கான கண்டறியும் பரிசோதனையையும்,30 வயது நிறைவு பெற்ற பெண்கள் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை, வாய் புற்று நோய்க்கான கண்டறியும் பரிசோதனைகளையும் செய்து கொள்ள வேண்டும்.

    இந்த பரிசோதனை எளிதில் வலியின்றி விரை வாக செய்து முடிக்கப்படும். எனவே நமது மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டமானது செயல் படுத்தப்படுகிறது.

    மாவட்டந்தோறும் இல்லங்கள் தேடி பணியாளர்கள் வந்து ஒரு அழைப்பிதழ் வழங்கு வார்கள். இந்த அழைப்பிதழில் உங்களுக்கு அருகாமையில் உள்ள புற்று நோய் கண்டறியும் மையத்தில் உள்ள விவரங்கள் இடம் பெற்றிருக்கும். அழைப்பி தழை அந்த மையங்க ளுக்கு எடுத்துச் சென்றால் உங்களுக்கு புற்றுநோய் அறிகுறி உள்ளதா என்று பணியாளர்கள் பரிசோதனை செய் வார்கள். தொற்று நோய் அதிக ரித்து வரும் கால கட்டங்களில் நம்மை காத்துக் கொள்வதே புத்திசாலித்தனமாகும்.

    எனவே இந்த நோய் தொற்று ஏற்படாமல் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் நோயிலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டத்திற்கு முழு ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். விழாவில் விஜய்வசந்த் எம்.பி., பொன்மனை பேருராட்சி தலைவர் அகஸ்டின், செயல் அலுவலர் ஜெயமாலினி, ஊராட்சி மன்ற தலை வர்கள் விமலா சுரேஷ் (சுருளோடு), லில்லி பாய் சாந்தப்பன் (பாலமோர்), பொன்.ரவி (திற்பரப்பு), துணைத் தலைவர் ஸ்டா லின் தாஸ், அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், சுகாதார பணிகளின் துணை இயக்குநர் டாக் டர் .மீனாட்சி, இணை இயக்குநர், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் சந்தோஷ், மருத்துவ அலுவலர் டாக்டர் கிஷோர், சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ், ஆய்வாளர் சுரேஷ்குமார், மருத்துவ பணி யாளர்கள், சுகா தார ஆய்வாளர்கள் செவிலி யர்கள், மற்றும் பொது மக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

    Next Story
    ×