என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரியில் முதல் கட்டமாக 400 ரேஷன் கடைகளில் இன்று விநியோகம்
- பணியாளர்கள் வீடு வீடாக சென்று வழங்கினர்
- கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள்
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கலை ஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும் நடக்கிறது.
முகாம் நடைபெறும் 4 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பபடிவங்களை ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக சென்று வீடுகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே குமரி மாவட்டத்திற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வந்தி ருந்த நிலையில் இன்று முதல் கட்டமாக முகாம் நடைபெறும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பபடிவங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் உள்ள 215 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டது.
ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். ஒவ்வொரு ரேஷன் கடை ஊழியர்களும் தினமும் காலை 40 பேருக்கும், மாலை 40 பேருக்கும் விண்ணப்ப படிவங்களை வழங்கினர்.
இதேபோல் தோவாளை தாலுகாவில் 59 ரேஷன் கடைகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டது. கல்குளம் தாலுகாவில் 126 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் இன்று 400 ரேஷன் கடைகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டது. விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொண்ட பொது மக்கள் அந்த விண்ணப்ப படிவங்களை முகாம் நடை பெறும் அன்று வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மின் இணைப்பு கார்டு மற்றும் பேங்க் பாஸ்புக் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். முகாம் நடைபெறும் பகுதியில் விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கும் தன்னார் வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்குவார்கள்.
எனவே பொதுமக்கள் முகாம் நடைபெறும் அன்று விண்ணப்ப படிவங்களை அதற்கான ஆவணங்களுடன் அந்த இடங்களுக்கு கொண்டு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இன்று முதல் கட்டமாக முகாம் நடைபெறும் 400 ரேஷன் கடைகளில் மகளிர் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன் கள் வழங்கப்பட்டது.
2-வது கட்டமாக முகாம் நடைபெறும் பகுதிகளுக்கு அடுத்த கட்டமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்