என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தடையை மீறி பேரணி சென்ற பா.ஜ.க.வினர் 10 பேர் மீது வழக்கு
- பா.ஜ.க. இளைஞர் அணியினர் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
- கார் பேரணியாக பா.ஜ.க. இளைஞர் அணியினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.
கன்னியாகுமரி:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர்அணி சார்பில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இதற்கிடையில் தடையை மீறி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிள் பேரணி செல்வதற்காக பா.ஜ.க. இளைஞர் அணியினர் நேற்று முன்தினம் கன்னியாகுமரி பழைய பஸ்நிலைய ரவுண்டானா சந்திப்பில் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் பா.ஜ.க. இளைஞர் அணியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக போலீசார் நடத்திய சமரசப் பேச்சு வார்த்தையின் அடிப்படையில் கார் பேரணியாக பா.ஜ.க. இளைஞர் அணியினர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தடையை மீறி மோட்டார் சைக்கிள் பேரணி செல்ல முயன்றதாக பா.ஜ.க. இளைஞர் அணியினர் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.