என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புரட்டாசிமாத திருவாதிரையையொட்டி கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
- கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.
- குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5½ அடிஉயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் தான் அமைந்து உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ஆகும். இங்கு குகன் என்ற முருக கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வர காரணமாயிற்று.
குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5½ அடிஉயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் தான் அமைந்து உள்ளது. அப்படிப்பட்ட புகழ் பெற்ற இந்த குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர தினமான நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1008 சங்காபிஷேகம் நடக்கிறது.
இதையொட்டி நாளை காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7.30 மணிக்கு தீபாரதனையும் நடக்கிறது. பின்னர் காலை 9 மணிக்கு சங்கு பூஜையும், 10.30 மணிக்கு குகநாதீஸ்வர பெருமானுக்கு 1008 சங்காபிஷேகமும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் 12.30 மணிக்கு வாகன பவனியும் நடக்கிறது.
பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி3முறை மேள தாளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு 1 மணிக்கு பக்தர்களுக்குஅருட்பிரசாதம்வழங்குதல் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.