search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிற்றார் அணை மூடல் பேச்சிப்பாறையில் 10.6 மில்லி மீட்டர் மழை
    X

    சிற்றார் அணை மூடல் பேச்சிப்பாறையில் 10.6 மில்லி மீட்டர் மழை

    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
    • பெருஞ்சாணி அணையில் இருந்து மட்டுமே தற்போது பாசனத்திற்காக 916 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது.

    நேற்று காலை முதல் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மாலையில் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    பேச்சிப்பாறையில் அதிக பட்சமாக 10.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாம்பழத்துறையாறு, அடையாமடை, ஆணைக் கிடங்கு பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்தது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டிய வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார், அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் சிற்றார் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ளது.பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து மட்டுமே தற்போது பாசனத்திற்காக 916 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 39.35 அடியாக இருந்தது. அணைக்கு 635 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 791 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சானி அணை நீர்மட்டம் 62.50 அடியாக உள்ளது. அணைக்கு 188 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 125 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது.

    Next Story
    ×