என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் 108வது பரிசளிப்பு விழா
- விழா நாகர்கோவில் ரோட்டரி கம்யூனிட்டி ஹாலில் வைத்து நடைபெற்றது.
- விழாவில் ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட வணிகவியல் (டைப்ரைட்டிங்) பள்ளிகள் சங்கத்தின் 108-வது பரிசளிப்பு விழா நாகர்கோவில் ரோட்டரி கம்யூனிட்டி ஹாலில் வைத்து நடைபெற்றது.
விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத் தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கி வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் தர்மராஜ் அறிக்கை சமர்ப்பித்தார் மற்றும் சங்க இணைச் செயலாளர் வேலாயுதம்பிள்ளை சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்தார்.
சிறப்பு விருந்தினராக கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் செந்தில்குமார் கலந்து கொண்டு சங்க தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார். முன்னதாக சிறப்பு விருந்தினரை சங்க செயற்குழு உறுப்பினர் கண்ணன் அறிமுகப்படுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் பொருளாளர் ராஜரெத்தினம், சங்க போட்டி தேர்வுக்குழு தலைவர் விஜயா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக சங்க துணைத் தலைவர் பட்டேல் என்.ஆர்.சுந்தரம் பிள்ளை நன்றி கூறினார்.
விழாவில் குமரி மாவட்ட அனைத்து பகுதிகளிலிருந்தும் தட்டச்சு பள்ளி உரிமையாளர்கள், ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.