search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலமோரில் 13.2 மில்லி மீட்டர் மழை
    X

    பாலமோரில் 13.2 மில்லி மீட்டர் மழை

    • பெருஞ்சாணி அணையில் இருந்து 550 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
    • சானல்களில் ஷிப்ட் முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் வழக்கமாக பெய்ய தொடங்கும்.

    ஆனால் இந்த ஆண்டு பருவ மழை தாமதமாக தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் கேரளாவையொட்டியுள்ள குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பாலமோர் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. அங்கு 13.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குழித்துறை, பேச்சிப்பாறை, மாம்பழத்துறையாறு, திருவட்டார் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

    மற்ற இடங்களில் சுட்டெ ரிக்கும் வெயில் அடித்து வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களிலிருந்து கன்னிபூ சாகுபடிக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலில் 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் பின்னர் 250 கன அடியாக உயர்த்தப்பட்டது.

    தற்பொழுது பெருஞ்சாணி அணையிலிருந்து 550 கன அடி தண்ணீர் கன்னிபூ சாகுபடிக்காக திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி, பேச்சிப் பாறை அணையில் இருந்தும் 61 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. 2 அணைகளில் இருந்தும் 611 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் சானல்களில் ஷிப்ட் முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.74 அடியாக இருந்தது. அணைக்கு 123 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 38.95 அடியாக இருந்தது. அணைக்கு 207 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    Next Story
    ×