என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குளச்சலில் 1500 கிலோ ரேசன் அரிசி, 1000 லிட்டர் மண்எண்ணை பறிமுதல்
- அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயற்சி
- வள்ளத்திற்கு உள்ள மானிய விலை மண்எண்ணையை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிப்பு
கன்னியாகுமரி:
தனிப்படை சப் - இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையிலான போலீசார் நேற்று மாலை குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.சைமன்காலனி பாலம் அருகில் செல்லும்போது அங்கு தோட்டத்தில் ஒரு கூண்டு வேன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தது.போலீசார் விரைந்து சென்றதும், வேன் டிரைவர் தப்பியோட முயற்சித்தார்.
போலீசார் அவரை மடக்கி பிடித்து, வேனையும் குளச்சல் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். வேனை திறந்து பார்க்கும்போது அதில் சிறு பிளாஸ்டிக் பைகளில் சுமார் 1500 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.விசாரணையில் வேன் டிரைவர் பரக்குன்றை சேர்ந்த சத்யா (வயது 28) என்பதும், அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயற்சித்ததும் தெரிய வந்தது. பின்னர் போலீசார் டிரைவர் மற்றும் அரிசி வாகனத்தை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.
இது போல் நள்ளிரவு குளச்சல் சப் - இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லின், ஏட்டுகள் வில்சன், செல்வகுமார் ஆகியோர் லியோன் நகரில் ரோந்து செல்லும்போது அங்கு வீட்டு காம்பவுண்டுக்குள் 31 பிளாஸ்டிக் கேன்களில் வள்ளத்திற்கு உள்ள மானிய விலை மண்எண்ணையை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உடனே போலீசார் அவற்றை மீட்டு குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.