search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் மழை நீடிப்பால் மேலும் 4 வீடுகள் இடிந்தது
    X

    குமரியில் மழை நீடிப்பால் மேலும் 4 வீடுகள் இடிந்தது

    • சிற்றாறு 1 அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தங்கு தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானம் மற்றும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப் போது மழை பெய்தது.

    மழையில் இருந்து தப்பிக்க பள்ளி சென்ற மாணவ மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர். மழை விட்டு விட்டு பெய்து வந்ததையடுத்து தீபாவளி விற்பனையும் மந்தமாக இருந்தது. கடை வீதிகளில் இன்று கூட்டம் குறைவா கவே காணப்பட்டது. களி யக்காவிளை, குழித்துறை, தக்கலை, இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. சிற்றாறு 1 அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் கோதையாறு, வள்ளியாறு, பரளியாறு களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தொடர் மழைக்கு மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி வழிகின்றன. பேச்சி பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகி றார்கள். அணையில் இருந்து எப்பொழுது வேண்டு மானாலும் உபரி நீர் வெளி யேற்றப்படலாம் என்பதால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு அறி வுறுத்தப்பட்டு உள்ளது.

    திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.60 அடியாக உள்ளது. அணைக்கு 465 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 72.17 அடியாக உள்ளது. அணைக்கு 512 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 18.71 அடியாக உள்ளது. அணைக்கு 155 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 234 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ள நிலையில் நேற்று மேலும் 4 வீடுகள் இடிந்துள்ளது.

    அகஸ்தீஸ்வரம், தோவாளை தாலுகாவில் தலா ஒரு வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 2 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. தொடர் மழையின் காரணமாக குலசேகரம், கீரிப்பாறை, தடிகாரன்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டை களில் மழை நீர் தேங்கி யுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

    அணைகளும், பாசன குளங்களும் நிரம்பி வருவ தையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியை தீவிர படுத்தியுள்ளனர். ஏற்க னவே மாவட்டம் முழுவதும் கும்பபூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். 6500 ஹெக்டே ரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் நடவு பணிகள் நடந்து வருகிறது.

    தற்போது நடவு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தங்கு தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வரு கிறார்கள்.

    Next Story
    ×