என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குளச்சலில் 735 லிட்டர் மண்எண்ணை பறிமுதல்
Byமாலை மலர்26 Aug 2022 1:51 PM IST
- அரசால் மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலுக்கு மானியவிலை மண்எண்ணை வழங்கப்படுகிறது
- மண்எண்ணையை கல்குளம் வட்டவழங்கல் அலுவலரிடம் ஒப்படைப்பு
கன்னியாகுமாரி:
குளச்சல் கடலோர காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு ஏட்டுக்கள் சிந்துகுமார், சிவகுமார், ஜஸ்டின் மற்றும் காவலர்கள் சந்திரசேகர், வினு ஆகியோர் குளச்சல் துறைமுக பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த கேரளா பதிவெண் கொண்ட ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அரசால் மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலுக்கு வழங்கும் மானியவிலை மண்எண்ணை 21 கேன்களில் 735 லிட்டர் இருந்ததை கண்டு பிடித்தனர்.
உடனே போலீசார் காட்டத்துறையை சேர்ந்த ஓட்டுனர் சுஜின் (வயது 36), சுவாமியார்மடத்தை சேர்ந்த கிரிபிரசாத் (38) ஆகிய இருவரையும் பிடித்து மற்றும் மண்எண்ணையையும் மீட்டு குளச்சல் மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மண்எண்ணையையும் பிடிப்பட்ட வேனில் வந்தவர்களையும் கல்குளம் வட்டவழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×