search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற 9 பேர் கைது
    X

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற 9 பேர் கைது

    • 100-க்கு மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
    • அனுமதியின்றி மது விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். மேலும் தஞ்சாவூர் பகுதியில் டாஸ்மாக் பாரில் மது குடித்த 2 பேர் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து போலீசார் தமிழகம் முழு வதும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அனுமதியின்றி மது விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    கோட்டார், வடசேரி பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட னர். அப்போது அனுமதி யின்றி மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களி டம் இருந்து மதுபாட்டில் களும் பறிமுதல் செய்யப் பட்டது.

    இதேபோல் தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட் பட்ட பகுதியிலும் அனுமதி இன்றி மது விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    நேற்று ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் பாரிலும் மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய் துள்ளனர்.

    மது விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். மது விலக்கு போலீசாரும் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரு கிறார்கள். சாராயம் விற்பனை செய்யப்படு கிறதா? என்பது குறித்து மலையோர பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    அனுமதி இன்றி தொடர்ந்து மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீ சார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×