என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
களியக்காவிளை அருகே அதிகபாரம் கனிம வளங்களை ஏற்றி கேரளாவிற்கு கடத்த முயன்ற 9 லாரிகள் பறிமுதல்
- அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
- லாரிகளில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது
களியக்காவிளை,ஜூன்.20-
குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான லாரிகள் கனிம வளங்களை வாக னங்களில் அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். சட்ட விரோதமாக பாறை களை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று காலை தனிப்பிரிவு போலீசார் களியக்காவிளை பகுதியில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த 9 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது லாரிகளில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் வாகனங்களை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதன் உரிமையாளர் யார் என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.