என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சென்னையில் இருந்து புறப்பட்ட பெண் போலீசாரின் சைக்கிள் பேரணி கன்னியாகுமரி வந்தது
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சிறப்பான வரவேற்பு
- இந்த சைக்கிள் பயண குழுவினர் மொத்தம் 730 கிலோ மீட்டர் தூரத்தை 10 நாட்களில் கடந்து வந்து உள்ளனர்.
கன்னியாகுமரி :
தமிழ்நாடு காவல்துறை யில் பெண்கள் நியமிக்கப் பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி பொன் விழா கொண்டாட்டம் தொடங்கி உள்ளது.
இதன் ஒரு பகுதியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பெண் போலீசாரின் சைக்கிள் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 17-ந்தேதி சென்னையில் இருந்து பெண்போலீசாரின் சைக்கிள் பேரணி புறப்பட் டது.
இந்த பேரணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஜி.பி. சைலேந்திரபாபு முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்த சைக்கிள் பேரணியில் பெண் போலீ ஸ் சப்-இன்ஸ்பெக்டர் 110 பெண் போலீசார் இடம் பெற்றிருந்தனர்.
விழுப்புரம், செங்கல் பட்டு, திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், காவல்கிணறு, அஞ்சு கிராமம், விவேகானந்தபுரம் வழியாக நேற்று மாலை கன்னியாகுமரி கடற்கரை சாலையை பேரணி வந்த டைந்தது. இந்த சைக்கிள் பயண குழுவினர் மொத்தம் 730 கிலோ மீட்டர் தூரத்தை 10 நாட்களில் கடந்து வந்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை சாலையில் உள்ள காட்சி கோபுரம் அருகே சைக்கிள் பேரணியின் நிறைவு விழா நடந்தது. குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பூங்கொத்து கொடுத்து சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார். அதைத்தொடர்ந்து சைக்கிள் பயணம் நிறைவு விழா கூட்டம் நடந்தது.
போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி. ராஜா வரவேற்று பேசினார். இதில் சென்னைஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி. ராதிகா, சென்னை பெருநகர போலீஸ் இணை கமிஷனர் சாமுண்டீஸ்வரி, தமிழ்நாடு காவல்துறை 10-வது அணி கமாண்டர் மணிவண்ணன், 12-வது அணி கமாண்டர் கார்மேகனன், 9-வது அணி கமாண்டர் ஜேசு சந்திர போஸ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்..