search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் பஸ் போர்ட் அமைக்க வேண்டும் - முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
    X

    நாகர்கோவிலில் பஸ் போர்ட் அமைக்க வேண்டும் - முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

    • 50 ஆண்டுகளுக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் மக்களின் பயண தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்
    • விரைவு போக்குவரத்துக்கழக பஸ் நிலையத்தையும் சேர்த்து அண்ணா பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும்.

    நாகர்கோவில் :

    முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதா கிருஷ்ணன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் 31-ந்தேதி நடந்தது. அப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து மேயர் மகேஷ் பேசும் போது வடசேரியில் ரூ.68 கோடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும். அவ்வாறு அமையும் போது வடசேரி கனகமூலம் சந்தை மற்றும் ஆம்னி பஸ் நிலையங்களும் அதனுடன் இணைக்கப்படும். மேலும் கனகமூலம் சந்தை, அண்ணா பஸ் நிலையத்துக்கு மாற்றப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    ஒருங்கிணைந்த பஸ் நிலையம் வடசேரியில் அமையும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை பற்றி முழுமையாக ஆய்வு செய்துள்ளாரா? மேலும் அண்ணா பஸ் நிலையத்தில் சந்தையை மாற்றும் போது விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் சந்தைக்கு செல்லும் பொதுமக்களின் வசதிகள் பற்றியும் மேயர் ஆய்வு செய்துள்ளாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    கனகமூலம் சந்தை ஏற்கனவே தன்னிகரில்லாத தன் மகுடத்தை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருவதாக நான் கருதுகிறேன். எனவே வடசேரி சந்தையை மேலும் பெருமைமிக்கதாக உருவாக்கும் முயற்சியில் மாநகராட்சி திட்டமிட வேண்டும்.

    வாஜ்பாய் ஆட்சி காலத் தில் நான் நகர்ப்புற மேம் பாட்டு துறை மந்திரியாக இருந்த போது மத்திய அரசாங்கத்தின் நிதியில் இருந்து ரூ.12 கோடிக்கு வடசேரி கனக மூலம் சந்தை மேம்பாடு (குளிர்பதன கிடங்கு உள்பட) வடசேரி பஸ் நிலையம் மேம்பாடு மற்றும் வடசேரி மீன் சந்தை மேம்பாடு (குளிர்பதன கிடங்கு உள்பட) திட்டம் தயாரிக்கப்பட்டது. அப் போது இருந்த மாநில அர சாங்கம் இந்த திட்டத்தை ஏற்று கொள்ளாமல் வடசேரி பஸ் நிலையத்தை மட்டும் மேம்படுத்த அனுமதித்தது. அதன்படி 2003-ம் ஆண்டு சுமார் ரூ.2 கோடி மத்திய அரசின் நிதி வழங்கப்பட்டு பணியும் நடந்தது. அன்று நான் திட்டமிட்டபடி ரூ.12 கோடிக்கான பணி முடிக்கப்பட்டு இருந்தால் இன்று ஏற்பட்டுள்ள பல சிரமங்களை அன்றே தவிர்த்திருக்க முடியும்.

    பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் விமான நிலைய தரத்திற்கு ஒப்பான பஸ் போர்ட்டை தமிழகத்தில் சென்னை, கோவை, நாகர்கோவில் போன்ற இடங்களில் அமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம்.

    புதிய பஸ் போர்ட்டுக்காக நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தின் பின்புறம் 20 ஏக்கர் நிலமும் அதற்காக அடையாளம் காணப்பட்டது. மேலும் புதிய பஸ்போர்ட் தற்போது அமைக்கப்பட்டுள்ள அப்டா சந்தை அருகில் உள்ள நான்கு வழிச்சாலை யுடன் இணையும் வகையில் திட்டமிடப்பட்டது. இந்த பஸ்போர்ட் அமைக்கப்பட்டால் குறைந்தது அடுத்த 50 ஆண்டுகளுக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் மக்களின் பயண தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எனவே மேயர், நான் மந்திரியாக இருந்த போது திட்டமிட்ட பஸ்போர்ட்டை கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும்.

    அண்ணா பஸ் நிலையத்தை மேம்படுத்த விரும்பினால், தமிழக முதல்- அமைச்சர் அனுமதியோடு, அண்ணா பஸ் நிலையத்தின் அருகில் இருக்கும் போக்குவரத்து துறைக்கு சொந்தமான தற்போது பெரிய அளவில் பயன்பாட் டில்இல்லாத விரைவு போக்குவரத்துக்கழக பஸ் நிலையத்தையும், பணிமனையையும் சேர்த்து அண்ணா பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும்.

    எக்காரணம் கொண்டும் மக்களுக்கு அன்றாடம் பயன்படும் வடசேரி சந்தையையும், அண்ணா பஸ் நிலையத்தையும் இடம் மாற்றி அமைக்க கூடாது.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×