என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தக்கலை அருகே கட்டிட காண்டிராக்டரை தாக்கி கத்தி முனையில் பணம் பறிப்பு
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கைது
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
தக்கலை :
தக்கலை அருகே உள்ள பனங்குழி கப்பியறை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 53). இவர் கேரளாவில் கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார்.
நேற்று மாலை அவர் கேரளாவில் இருந்து தக்கலைக்கு வந்தார். இரவு 7 மணியளவில் திருவிதாங்கோடு பகுதியில் உள்ள அமராவதி குளத்தின் வழியாக சுப்பிரமணியன் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர்.
அவர்கள், சுப்பிர மணியனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். பின்னர் அவரை தாக்கிவிட்டு ரூ.25 ஆயிரத்தை பறித்தனர். தாக்குதலில் காயம் அடைந்த சுப்பிரமணியன் கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதனை கண்டதும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
தாக்குதலில் காயம் அடைந்த சுப்பிரமணியன், சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். தாக்குதல் மற்றும் வழிப்பறி குறித்து தக்கலை போலீசில் சுப்பிரமணியன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார், திருவிதாங்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள், போலீசாரை கண்டதும் வாகனத்தை திருப்பிச் செல்ல முயன்றனர்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்ற 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்க ளிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளனர். இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் தான், நேற்று இரவு காண்டிராக்டர் சுப்பிரமணியனை தாக்கி பணம் பறித்தவர்கள் என்பது தெரியவந்தது. அதன்பேரில் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் திருவிதாங்கோடு முகமது சார்ஜின் (28), வேர்க்கிளம்பி தாணிவிளை பெலிக்ஸ் (24) என தெரியவந்தது. இவர்கள் வேறு எங்காவது வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செய ணல்களில் ஈடு பட்டுள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்..
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்