search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் விடுமுறை நாளில் மக்கள் கூட்டம்
    X

    குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் விடுமுறை நாளில் மக்கள் கூட்டம்

    • பொருட்காட்சியின் முக்கிய தினமான ஆடி அமாவாசை வருகிற 16-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.
    • குழந்தைகளை குதூகலப்படுத்தும் ராட்டினங்களில் மக்கள் கூடுதல் நேரத்தை செலவிடுகின்றனர்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள வி.எல்.சி.திருமண மண்டபத்தில் 98-வது பொருட்காட்சி கடந்த 2-ந்தேதி தொடங்கியது. வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது. பொருட்காட்சியின் முக்கிய தினமான ஆடி அமாவாசை வருகிற 16-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது.

    அன்றைய தினம் முன்னோர்கள் நினைவாக பலி தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று உள்ளூர் விடுமுறை தினமாக மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. நாளை (15-ந்தேதி) சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறையானதால் 15 மற்றும் 16-ந்தேதி 2 நாட்கள் தொடர் விடுமுறையாக இருப்பதால் மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த விடுமுறை நாட்களில் வாவுபலி பொரு ட்காட்சி மைதானத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டும் இல்லாமல் கேரளா பகுதியில் உள்ள மக்களும் அதிகம் வந்து செல்கின்றனர். இந்த பொருட்காட்சியில் குழந்தை களை குதூகலப்படுத்தும் மிகப்பெரிய ராட்டினங்கள், பெரியவர்களை குதூகலப்ப டுத்தும் மரணக்கிணறு உட்பட பல்வேறு வகையான விளையாட்டுகள், கண்காட்சி பொருட்கள் உள்ளன. இது மட்டும் இல்லாமல் விவசாயிகளின் விளை பொருட்கள் ஏராள மானவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ள்ளது. மேலும் ஏராளமான கைவினை பொருட்களும் பொருட்காட்சியில் பார்வை க்காக வைக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரும் உற்சாகமாக வந்து வாவுபலி பொருட்காட்சியை கண்டு களித்து செல்கின்றனர்.

    குறிப்பாக குழந்தைகளை குதூகலப்படுத்தும் ராட்டினங்களில் மக்கள் கூடுதல் நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால் பெண்கள் புதிய ரக செடிகளை வாங்கி செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    Next Story
    ×