என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
களியக்காவிளை அருகே மாவு மில் அதிபர் தீக்குளித்து தற்கொலை
- அவரது 2 விரல்கள் துண்டிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
- உடலில் தீ பற்ற பற்ற வலி தாங்க முடியாமல் அவர் அலறி உள்ளார்
கன்னியாகுமரி :
களியக்காவிளை அருகே உள்ள ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் அதே பகுதியில் சொந்தமாக மாவு மில் நடத்தி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக பால்ராஜ் நோயினால் அவதிப்பட்டு வந்தார். அவரது 2 விரல்கள் துண்டிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதனால் பால்ராஜ், சில தினங்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
நேற்று இரவு வீட்டில் எல்லாரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது பால்ராஜ், தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடலில் தீ பற்ற பற்ற வலி தாங்க முடியாமல் அவர் அலறி உள்ளார். அதனை கேட்டு குடும்பத்தினர் ஓடிவந்தனர்.
தீயில் உடல் கருகிய பால்ராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பால்ராஜ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து களியக்கா விளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மில் உரிமையாளர் தீ குளித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.