என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம் பறித்தவர் கைது
- கத்தியை காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்துச் சென்றார்.
- பணம் பறித்தது வில்லுக்குறி சடையப்பர் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் (51) என்பது தெரிய வந்தது
கன்னியாகுமரி :
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு அண்ணாநகர் காலனியைச் சேர்ந்தவர அய்யாத்துரை (வயது 47).
கூலித்தொழிலாளியான இவர், நேற்று தக்கலை அருகே உள்ள குமாரகோவில் பகுதிக்கு வேலைக்கு ெசன்றார். மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்தார். குமாரகோவில் விலக்கு அருகே வந்தபோது அவரை ஒருவர் வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்துச் சென்றார்.
இது குறித்து தகக்லை போலீஸ் நிலையத்தில் அய்யாத்துரை புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார வழக்குபதிந்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், அய்யாத்துரையிடம் பணம் பறித்தது வில்லுக்குறி சடையப்பர் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் (51) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது தக்கலை, இரணியல், குளச்சல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.