என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குளச்சல் இரும்பிலி குளத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
- யார்?அவர் போலீசார் விசாரணை
- போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
குளச்சல் :
குளச்சல் இரும்பிலியில் யாமான் குளம் உள்ளது. கடந்த பல நாட்களாக இந்த குளம் பாசிப்படர்ந்து பொதுமக்கள் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அந்த வழியாக சென்றவர்கள், குளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கவிழ்ந்த நிலையில் மிதந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இறந்து கிடந்த நபர் லுங்கியும், முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார். அவர் குளத்தில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு காரணமா? என்று தெரியவில்லை. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் இறந்து 2 நாட்களுக்கு மேலாகும் என கூறப்படுகிறது. இது குறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. தகவலறிந்த ரீத்தாபுரம் பேரூராட்சி தலைவர் எட்வின் ஜோஸ், கவுன்சிலர் ஷீலா ஆகியோர் சம்பவம் இடம் சென்று பார்வை யிட்டனர். குளச்சல் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இரும்பிலி யாமான் குளத்தில் பி ணமாக மிதந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரும்பிலியாமான் குளத்தில் ஆண் பிணம் மிதந்து கிடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.