என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மார்த்தாண்டம் அருகே வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு - தொழிலாளி மீது போலீசார் வழக்கு
- ரசல் வீடும் அடித்து நொறுக்கப்பட்டது. அங்கி ருந்த பொருட்கள் சூறையாடப்பட்டது.
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை :
குமரி மாவட்டம் குல சேகரம் கரப்பால் நகரை சேர்ந்தவர் ரசல் (வயது 61). இவருக்கு சொந்தமான தோட்டம் மார்த்தாண்டம் கோட்டை விளையில் உள்ளது.
இவரது மனைவி மதுரையில் மின்வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ரசல் குடும்பத்தினருடன் தற்போது மதுரையில் வசித்து வருகிறார்.
எனவே ரசலின் ேதாட்டத்தை அவரது தம்பி சைலஸ் (41) பராமரித்து வருகிறார். இந்த தோட்டத் தில் ஏராளமான வாழை மரங்கள் உள்ளன. சம்ப வத்தன்று இந்த வாழைகளை யாரோ வெட்டி சாய்த்துள்ளனர். மேலும் ரசல் வீடும் அடித்து நொறுக்கப்பட்டது. அங்கி ருந்த பொருட்கள் சூறையாடப்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன் விரோதம் காரணமாக பம்மம் பகுதியை சேர்ந்த தொழிலாளி மகேஷ் குமார் (49) தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் சைலஸ் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் மகேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.