search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே வெளிநாடு செல்ல இருந்த தொழிலாளி விபத்தில் பலி
    X

    இரணியல் அருகே வெளிநாடு செல்ல இருந்த தொழிலாளி விபத்தில் பலி

    • எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது டெம்போ மோதியதில் தூக்கி வீசப்பட்ட அப்துல்ரகுமான் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலி
    • 27-ம் தேதி மீண்டும் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார்

    கன்னியாகுமரி :

    சுங்கான்கடை அடுத்த ஆளூரை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (55). இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. மூத்த மகளுக்கு திருமணமாகி சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையை பார்க்க வெளிநாட்டில் இருந்து வந்த அப்துல்ரகுமான் நேற்று ஸ்கூட்டரில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து மதியம் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். களியங்காடு தாண்டி சுங்கான்கடை வரும் போது பின்னால் வேகமாக வந்த டெம்போ ஸ்கூட்டரை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது டெம்போ மோதியதில் தூக்கி வீசப்பட்ட அப்துல்ரகுமான் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பார்வதிபுரம் - தோட்டியோடு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. விபத்தில் பலியான அப்துல் ரகுமான் வரும் 27-ம் தேதி மீண்டும் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார் . ஆனால் அதற்குள் விபத்தில் சிக்கி பலியாகி விட்டார். ஸ்கூட்டரில் வந்த தொழிலாளி டெம்போ மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×