search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் ஐப்பசி விழா
    X

    அய்யா நாராயணசாமி இந்திர வாகனத்தில் எழுந்தருளி  வலம் வந்தபோது எடுத்த படம் 

    சுவாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் ஐப்பசி விழா

    • முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அய்யாவை வணங்கி சென்றனர்.
    • உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பும், அன்ன தர்மமும் நடந்தது.

    கன்னியாகுமரி:

    சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் ஞாயிற்றுகிழமை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். ஐப்பசி மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பதியில் அய்யாவழி பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    நேற்று அதிகாலை முதலே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துகுடி,சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யாவை வணங்கி சென்றனர்.

    இதையொட்டி நேற்று அதிகாலை 4-மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பும் பின்னர் அன்ன தர்மமும் நடந்தது.

    பக்தர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை,பாக்கு உள்ளிட்டவை இனிமமாக வழங்கப்பட்டது.தொடர்ந்து சாமிதோப்பு தலைமை குரு பால ஜனாதிபதி, அய்யாவழி சமயம் மற்றும் அய்யா வைகுண்டசாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே சுமார் 1 மணிநேரம் ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

    மாலையில் அய்யாவுக்கு பணிவிடை நடந்தது.

    தொடர்ந்து பிச்சிப் பூவால் அலங்கரிக்கப்பட்ட சிறிய சப்பர வாகன பவனியும் அன்ன தர்மம் நடைபெற்றது.

    Next Story
    ×