என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் பகுதியில் 274 சாலைகளை சீரமைக்க ரூ.64 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு - மாநகராட்சி கூட்டத்தில் மேயர் மகேஷ் தகவல்
- வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து அந்தந்த கவுன்சிலர்கள் அதிகாரிகளை சந்தித்து தெரிவித்தால் உடனடியாக மேம்பாட்டு பணிகள் மேற் கொள்ளப்படும்.
- 75-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநக ராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது.
கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்களுக்கு அடை யாள அட்டைகளை மேயர் மகேஷ் வழங்கினார். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் முத்துராமன், அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், செல்வகுமார், கவுன்சிலர்கள் டி.ஆர். செல்வம், ரமேஷ், அய்யப் பன், நவீன்குமார், மேரி ஜெனட் விஜிலா, அக்ஷ்யா கண்ணன், அனிலா சுகுமா ரன், அருள் சபீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசியதாவது:-
நாகர்கோவில் மாநக ராட்சியுடன் இணைக்கப் பட்ட 1, 2, 3, 50, 51, 52 வார்டுகளில் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ. 5 கோடியே 89 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து அந்தந்த கவுன்சிலர்கள் அதிகாரி களை சந்தித்து தெரிவித்தால் உடனடியாக மேம்பாட்டு பணிகள் மேற் கொள்ளப்படும்.
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள 274 சாலைகளை சீரமைக்க ரூ.64 கோடியே 68 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்ட உடன் விரைவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்ப டும் என்றார்.
இதை தொடர்ந்து கவுன்சிலர்கள் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொருட்காட்சி மைதானத்தில் உள்ள மணல்களை அப்புறப்படுத்த ரூ.23 லட்சம் நிதி செலவிடப்பட்டுள்ளது. மேலும் 75-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் உறுதி அளித்துள்ளார்.
இதற்காக அனைத்து கவுன்சிலர்களும் முழு ஒத்துழைப்பு அளிப்போம். தற்பொழுது மின்விளக்கு பிரச்சனைகள், வீடுகளில் குப்பை எடுக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது.ஆனால் ஓடைகளில் உள்ள குப்பைகள் சரிவர எடுக்கப்படவில்லை. சாலைகளும் மிகவும் பழுதாகி உள்ளது. அந்த சாலைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகர்கோவில் மாநக ராட்சிக்கான பட்ஜெட் டில் ரூ.2.50 கோடி பற்றாக்குறை என தெரிவிக் கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில செலவினங்கள் எதற்காக செலவிடப்பட்டுள்ளது என்பதை விரிவாக அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக பகுதியில் ரவுண்டானா அமைக்கப் பட்டுள்ளது. இது போல செட்டிகுளம் பகுதியில் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சவேரியார் ஆலயத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். மாநகராட்சி வாகனங்களை பழுது பார்க்க ஒர்க் ஷாப் அமைக்க வேண்டும்.
வலம்புரி விளை குப்பை கிடங்கில் ஏற்படும் தீ விபத்தினால் வட்டவிளை பகுதி மக்கள் பாதிக்கப்ப டுகிறார் கள். பலர் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள்.எனவே குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோணம் முதல் எறும்பு காடு வரை உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கேப் ரோடு , மீனாட்சிபுரம் சாலை உள்பட மாநகர பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் இரு வழி பாதையாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். அனைத்து சாலைகளும் இரு வழி சாலையாக மாற்றப்படும் பட்சத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படும்.
இதற்கு அனைத்து கவுன்சிலர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சவேரியார் ஆலயத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலை விரைவில் சீர மைக்கப்படும். நாகர் கோவில் மாநகராட்சியில் உள்ள வாகனங்களை பராமரிக்க ஒர்க் ஷாப் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வலம்புரி விலை குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. 1 கிலோமீட்டர் தூரம் சாலையை சீரமைக்க வேண்டும் என்றால் ரூ.1 கோடி தேவைப்படுகிறது.நாகர்கோவில் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகராட்சி யை இந்தியாவிலேயே முதல் மாநகராட்சியாக மாற்ற அனைத்து கவுன்சிலர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்