search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பேரூராட்சிகளின் மேம்பாட்டு பணிக்கு ரூ.1.80 கோடி ஒதுக்கீடு
    X

    கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பேரூராட்சிகளின் மேம்பாட்டு பணிக்கு ரூ.1.80 கோடி ஒதுக்கீடு

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை

    கன்னியாகுமரி :

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேரூர் பேரூராட்சிக் குட்பட்ட பால கிருஷ்ணன்புதூர், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் உதிரப்பட்டி, இந்திரா காலனி பகுதியில் குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது.

    அப்பகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மற்றும் பைப்லைன் அமைத்து குடிநீர் வழங்கும் திட்ட பணிக்கு ரூ.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

    மேலும், புத்தளம் பேரூராட்சிக் குட்பட்ட கீழபுத்தளம் பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பைப்லைன் அமைத்து மணவாளபுரம், கீழபுத்தளம், புத்தளம் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய ரூ.35 லட்சமும், அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குட்பட்ட தட்டரிப்பு அளம் பகுதியில் உள்ள தகனமேடை பகுதிக்கு செல்வதற்கு புதிய பாலம் அமைப்பதற்கு ரூ.58 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 88 லட்சத்தை பேரூராட்சி நிர்வாகத்தின் 2023-2024-ம் ஆண்டிற்கான மூலதன மானிய நிதியின் கீழ் அரசு ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட பேரூ ராட்சி பகுதிகளில் குடிநீர் உள்ளிட்ட மேம்பாட்டு பணிக்காக நிதி ஒதுக்கி யதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×