search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைகள் சீரமைக்க ரூ.8.56 கோடி ஒதுக்கீடு
    X

    முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைகள் சீரமைக்க ரூ.8.56 கோடி ஒதுக்கீடு

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
    • 28 சாலைகளை சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்

    கன்னியாகுமரி :

    சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட கிள்ளியூர் மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றி யங்க ளுக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் பல சாலைகள் சீரமைத்து பல வருடங்கள் ஆகிய தாலும், புயல் மற்றும் பெரு கனமழை யினாலும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது.

    எனவே கிள்ளியூர் மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த பல சாலைகளை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் அரசு முதன்மை செயலாளர், மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து நான் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் தற்போது கீழ்காணும் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய 28 சாலைகளை சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 56 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த சாலை பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கி சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×