search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அம்பேத்கர், கலைஞர் பிறந்த நாள் பேச்சு போட்டிகள் - கலெக்டர் தகவல்
    X

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அம்பேத்கர், கலைஞர் பிறந்த நாள் பேச்சு போட்டிகள் - கலெக்டர் தகவல்

    • கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளன.
    • முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது 2023-24-ம் நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஆகஸ்ட் 2-ந்தேதி அன்றும், கலைஞர் பிறந்தநாளையொட்டி ஆகஸ்ட் 4-ந்தேதி அன்றும் நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் காலை 9.30 மணியளவில் நடை பெற உள்ளன.

    பேச்சு போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாண வர்களை திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர். போட்டிக்கான தலைப்புகள் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும், பள்ளி மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் வாயிலா கவும் தெரிவிக்கப்படும்.

    கல்லூரி போட்டியில் வெற்றிபெறும் மாண வர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    பள்ளி போட்டியில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாண வர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×