என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அப்பர் கோதையாறு வனப்பகுதியில் யானை கூட்டத்துடன் இணைந்து உலா வரும் அரிசி கொம்பன்
- அரிசி கொம்பன் யானை உலா வரும் காட்சிகள் அவ்வப் போது சமூக வலைதளங்களில் பரவியது.
- கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த வனத்துறையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
கேரள மாநிலம் இடுக்கி சின்னக்கனால் பகுதியில் அரிசி கொம்பன் யானை அட்டகாசம் செய்தது. இதைய டுத்து அரிசி கொம்பன் யானையை தமிழ்நாடு கொண்டு வரப்பட்டு பெரியார் புலிகள் காப்ப கத்தில் முல்லைக்கொடி வனப்பகுதியில் விட்டனர். அதன்பிறகு அரிசி கொம்பன் யானை கம்பம் பகுதியில் சுற்றி திரிந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் அட்டகாசம் செய்து வந்ததையடுத்து மயக்க ஊசி செலுத்தி யானையை நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வனப்பகுதிக்கு கொண்டு வந்தனர்.
கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி அப்பர் கோதையாறு பகுதியில் அரிசிகொம்பன் யானை விடப்பட்டது. யானை கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். யானையை குடியிருப்பு பகுதிகளுக்குள் விடாமல் தடுக்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு கண்கா ணிப்பு பணியை மேற் கொண்டனர். அரிசி கொம்பன் யானை உலா வரும் காட்சிகள் அவ்வப் போது சமூக வலைதளங்களில் பரவியது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு அரிசிகொம்பன் யானை மெலிந்த நிலையில் காணப்படுவதாக புகைப்ப டம் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை தற்போது வனப்பகுதியில் புத்துணர்ச்சி யுடன் உலா வர தொடங்கி யுள்ளது. அரிசி கொம்பன் யானை வசித்து வரும் பகுதியில் 2 குட்டி யானைகள் உட்பட 10 யானைகள் உள்ளது.
அந்த யானைகள் கூட்டத்துடன் சேர்ந்து அரிசி கொம்பன் யானை உலா வருகிறது. குற்றியாறு அணைப்பகுதி, அப்பர் கோதையாறு, முத்துக்கு ளிவயல் பகுதிகளில் தற்போது அரிசி கொம்பன் யானை சுற்றி வருகிறது.
யானை கூட்டத்துடன் இணைந்து விட்டதால் அரிசி கொம்பன் யானையை கண்காணிக்க நியமிக்கப்பட்டி ருந்த வனத்துறையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.