search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இனிப்புகளில் செயற்கை வண்ணங்கள் சேர்க்க கூடாது
    X

    இனிப்புகளில் செயற்கை வண்ணங்கள் சேர்க்க கூடாது

    • உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை
    • தயாரிப்பு தேதி தெளிவாக இருக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நியமன அலுவர் செந்தில் குமார் தலைமையில், தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற் பனை செய்யும் வியாபாரி களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    மாவட்டத்தில் உள்ள வட்டாரம், நகராட்சிகளில் செயல்பட்டு வரும் பேக்கரி, இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரித்து விற்பனை செய்பவர்கள், நுகர்வோர்கள் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இனிப்பு, காரவகைகள் விற்பனைக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப் பட்டுள்ளது குறித்து நியமன அதிகாரி செந்தில்குமார் கூறியதாவது:-

    இனிப்பு பாக்சுகளை விற்பனை செய்யும் வணிகர்கள், அந்த பாக்ஸில் இனிப்பு தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் உண்ணத்தகுந்த காலம் ஆகியவற்றை தவறா மல் குறிப்பிட வேண்டும். உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

    இனிப்பு, கார வகைகளை தயாரிக்க பயன்படுத்தப்ப டும் சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விபரங் களை தகவல் பலகையாக உணவு விற்பனை கூடத்தில் வைக்க வேண்டும். சமைப்ப தற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர், தூய்மையாக பாது காக்கப்பட்ட தண்ணீ ராக இருக்கவேண்டும்.

    இனிப்பு காரவகைகளை தயாரிக்க பயன்படுத்தப்ப டும் நீரின் தரத்தினை அறி யும் பொருட்டு பகுப்பாய்வு சான்றிதழ் பெற்று இருத்தல் வேண்டும். சுத்தமான தண்ணீரில் தான் பொருட் களை சுத்தம் செய்ய வேண் டும். உணவு வியாபாரம் முடிந்தவுடன் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்து பூஞ்சை தொற்று ஏற்படாதவாறு உலர வைத்தல் வேண்டும்.

    உணவு கையாளுதல் மற்றும் பரிமாறுதல் ஆகிய பணிகளை செய்பவர்கள் கையுறைகள், தலைகவசம் மற்றும் மேலங்கிகள் அணிய வேண்டும். உணவு பொருட் களை கையாளுபவர்கள் உடற்தகுதி குறித்த மருத்துவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

    பொட்டலங்களில் பேக்கிங் செய்து விற்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளில் தயாரிப்பு தேதி, உபயோகப்படுத்தும் காலம், தொகுப்பு எண், தயாரிப்பா ளரின் முகவரி, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு எண் ஆகி யவை லேபிளில் தெளி வாகத் தெரியும்படி அச்சி டப்பட வேண்டும்.

    பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு விபர சீட்டு இடும் போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி சிறந்த பயன்பாட்டு காலம் (காலா வதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு போன்றவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

    இனிப்பு மற்றும் கார வகைகளை பேக்கிங் செய்து நுகர்வோருக்கு கொடுக்கும் போது உணவு சேமிப்புக் குரிய தரத்துடன் உள்ள பிளாஸ்டிக் கொள்கலன் களையே பயன்படுத்த வேண்டும்.

    பண்டிகை கால இனிப்பு வகைகளை பரிசு பேக்கிங் செய்யும் போது பாலால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு பொருட்களுடன் பேக்கிங் செய்து விற்பனை செய்யக் கூடாது.

    பண்டிகை காலமான தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ள தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்ட பங்கள், வீடுகள் ஆகிய இடங்களில் ஆர்டரின் பேரில் விற்பனைக்காகத் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின் படி உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றுத்தான் விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிப்பு மற்றும் கார வகைகள் சில்லறை விற்பனை செய்யும் பொழுது காட்சிப்ப டுத்தப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் முன் தயா ரிக்கப்பட்ட தேதி மற்றும் சிறந்த பயன்பாட்டு தேதி கண்டிப்பாக எழுதி வைக்க வேண்டும்.

    இனிப்பு, காரவகை உணவுப் பொருட்களை வாங்கும் நுகர்வோர்கள், ஈக்கள் மொய்க்கும் வண் ணம் இனிப்பு, காரவகைகள் திறந்த நிலையில் இருந்தால் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். வாங்கும் இனிப்பு மற்றும் கார வகை களுக்கு முறையான ரசீது பெற்றி ருத்தல் வேண்டும். அதிகப்படி யாக செயற்கை வண்ணங்கள் கொண்டு இனிப்பு பொருட் கள் தயாரிக்கப் பட்டிருந்தால் அதனை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

    பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் முறையான விபரச்சீட்டு உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். உணவு தயாரிப்பாளர்கள் அனை வரும் முறையான பயிற்சி களை பெற்றிருக்க வேண் டும். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பொட்டலங்களில் பேக்கிங் செய்து விற்கப்படும் இனிப்பு மற்றும் காரவகை பலகா ரங்களை வாங்கும் போது உணவுப்பாதுகாப்பு துறையின் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சிட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

    மேலும் நுகர்வோர்கள் உணவுப் பொருட்கள் தரம் பற்றிய குறைபாடுகளுக்கு உணவு பாதுகாப்பு துறை யின் வாட்ஸ் ஆப் புகார் எண் 94440 42322 என்ற எண்ணி லோ அல்லது உணவு பாது காப்புதுறை மாவட்ட நியமன அலுவலக தொலைபேசி எண் 04652-276786 என்ற எண்ணிலோ புகார் தெரி விக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×