search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேல்மிடாலத்தில் இறங்கு தளம் பணி முடியும் முன் எந்திரங்களை கொண்டு செல்ல முயற்சி - மீனவர்கள் முற்றுகை போராட்டம்
    X

    மேல்மிடாலத்தில் இறங்கு தளம் பணி முடியும் முன் எந்திரங்களை கொண்டு செல்ல முயற்சி - மீனவர்கள் முற்றுகை போராட்டம்

    • கடந்த மாதம் 22-ந்தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
    • மீனவர்கள் எந்திரங்களை எடுத்து செல்லவிடாமல் சிறைபிடித்து முற்றுகையிட்டனர்

    கன்னியாகுமரி :

    கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலம் கடற்கரை கிராமத்தில் நேர்கல்லுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கும் பணி 14-3-2022 அன்று தொடங்கி நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் தொடர்ந்து 5 மாதங்களாக பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கடந்த மாதம் 22-ந்தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை கடலரிப்பு தடுப்பு கோட்ட அதிகாரிகள் மேல்மிடாலம் ஊர் நிர்வாகிகள் கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையில் மே மாத இறுதிக்குள் பணிகள் நிறைவு செய்து விடுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட் டது. அதன் பின்னரும் பணிகள் சீராக நடைபெறவில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அக்கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எந்திரங்களை எடுத்து செல்ல கண்டெய்னர் லாரியை கொண்டு சென்று உள்ளனர். இதனை கடலோரத்தில் தூங்கிக்கொண்டிருந்த மீனவர்கள் பார்த்து உள்ளனர்.

    அவர்கள் ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். தகவல் அறிந்து வந்த மீனவர்கள் எந்திரங்களை எடுத்து செல்லவிடாமல் சிறைபிடித்து முற்றுகையிட்டனர். இதனால் நள்ளிரவு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    நேற்று பொதுப்ப ணித்துறை அதிகாரி ஒருவர் சென்று மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். வேறு எந்திரங்கள் கொண்டு வந்து பணி தொடங்குவதாக கூறி உள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த மீனவர்கள் மீன் இறங்குதளம் பணி நிறைவடையாமல் வாகனங்களை விடுவிக்க மறுத்து உள்ளனர். இதனால் வந்த அதிகாரி திரும்பி சென்றுள்ளார். எந்திரங்கள் மற்றும் வாகனங்கள் அதே பகுதியில் நிறுத்தி வைக்கப் பட்டு உள்ளன.

    Next Story
    ×