search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம், கன்னியாகுமரி கோவில்களில் பூஜை பொருள் விற்பனை உரிமை ரூ.20 லட்சத்திற்கு ஏலம்
    X

    சுசீந்திரம், கன்னியாகுமரி கோவில்களில் பூஜை பொருள் விற்பனை உரிமை ரூ.20 லட்சத்திற்கு ஏலம்

    • குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்கள் உள்ளன.
    • உரிமம் தனி நபருக்கு ஏலம் விடப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் உள்பட 490 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் உரிமம் தனி நபருக்கு ஏலம் விடப்படுவது வழக்கம்.

    அதன்படி நேற்று சுசீந்திரத்தில் உள்ள மாவட்ட திருக்கோவில் நிர்வாக அலுவலகத்தில் இணை ஆணையர் ஞானசேகர தலைமையில் ஒரு ஆண்டிற்கான பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் உரிமத்திற்கான ஏலம் நடந்தது. உதவி ஆணையர் தங்கம் முன்னிலை வகித்தார்.

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பிரசாதம் விற்பனை செய்யும் உரிமம் ரூ.8 லட்சத்து ஆயிரத்திற்கும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தேங்காய், பழம் விற்பனை செய்யும் உரிமம் ரூ.7 லட்சத்து 18 ஆயிரத்து 200-க்கும், பூ, மாலை விற்பனை செய்யும் உரிமம் ரூ.5 லட்சத்திற்கும் என மொத்தம் ரூ.20 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் ஏலம் விடப்பட்டது.

    இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×