என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஏ.வி.எம். கால்வாயை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் - மத்திய மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
- மக்கள் பயணம் செய்வதற்கும், சரக்கு போக்கு வரத்துக்கும் உபயோகம் உள்ள நீர்வழி போக்குவரத்தாக மாறும்
- கால்வாய் மூலம் நிலத்தடி நீர் உயர்ந்து கடல் நீர் நிலத்திற் குள் புகுவதை தடுத்து, மண் வளம் பெறவும் உதவும்
நாகர்கோவில் :
மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்தா சோனாவாலை டெல்லியில் அவரது அலுவலகத்தில் விஜய்வசந்த் எம்.பி. சந்தித்தார்.
அப்போது, 19-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மகாராஜாவால் திருவ னந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக ஏ.வி.எம். கால்வாய் பணி தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த பணி பாதியில் நிறுத்தப்ப ட்டது.
தற்போது அந்த கால்வாய் அரை குறையாக காணப்படுகிறது. இந்த கால்வாய் பணியை மத்திய அரசு ஏற்றெடுத்து முடித்தால், மக்கள் பயணம் செய்வதற்கும், சரக்கு போக்கு வரத்துக்கும் உபயோகம் உள்ள நீர்வழி போக்குவரத்தாக மாறும். இதனால் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இயலும்.
திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி என்பதை பிற்காலத்தில் கேரள மாநிலம் கொல்லம் வரையிலும், தமிழ்நாட் டின் தூத்துக்குடி வரை யில் நீட்டிக்க முடியும். மேலும், இந்த கால்வாய் மூலம் நிலத்தடி நீர் உய ர்ந்து கடல் நீர் நிலத்திற் குள் புகுவதை தடுத்து, மண் வளம் பெறவும் உதவும். மேலும், கன்னியா குமரி சுற்றுலாவை மேம்படுத்த முடியும்.
எனவே ஏ.வி.எம்., கால் வாயை சீரமைக்க தேவை யான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.