என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குளச்சல் அருகே தர்ம சாஸ்தா கோவில் உட்பட 3 கோவில்களில் உண்டியல் கொள்ளை
- இசக்கி அம்மன் கோவிலிலும் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
- 3 கோவில்களில் நடந்த கொள்ளை சம்பவம் குளச்சல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குளச்சல் :
குளச்சல் அருகே தெற்கு பண்டாராவிளை பகுதியில் இந்துஅறநிலைய துறைக்கு சொந்தமான காவு தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
நேற்று பூஜைகள் முடிந்து வழக்கம்போல் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் எடுத்துச்சென்றிருந்தது தெரியவந்தது. இது குறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
இதேபோல் கூட்டாவிளை அருகே பட்டத்திவிளை இசக்கியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்தும் மர்மநபர் பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் குளச்சல் அருகே வெள்ளிப்பிள்ளையார் இசக்கி அம்மன் கோவிலிலும் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர்.
அடுத்தடுத்து 3 கோவில்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 உண்டியல் கொள்ளையிலும் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கோவில் உண்டியலில் பதிவாகி இருந்த கைரேகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து 3 கோவில்களில் நடந்த கொள்ளை சம்பவம் குளச்சல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.