என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குலசேகரம் அருகே சானலில் மிதந்து வந்த வாலிபர் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
- வாலிபரின் இடது கையில் கைக்கடிகாரம் ஒன்று கட்டப்பட்டுள்ளது
- உடல் ஆற்றில் விழுந்து 2 நாட்கள் ஆன நிலையில் காணப்பட்டது.
கன்னியாகுமரி :
குலசேகரம் அருகே சுருளோடு வெட்டி திருத்தி கோணம் பகுதியில் பேச்சிப்பாறையில் இருந்து தோவாளை செல்லும் சானலில் நேற்று மதியம் சுமார் 40 வயது மதிக்கத் தக்க வாலிபரின் உடல் தண்ணீரில் மிதந்துவந்து கொண்டு இருந்தது. சானலில் குளித்து கொண்டிருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அந்த பகுதியில் உள்ளவர்கள் சுருளோடு ஊராட்சி மன்ற தலைவர் விமலா சுரேஷுக்கு தகவல் கொடுத்தனர். அவர் குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரி வித்தார். அதன்பே ரில் குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பா லமுருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி ணனர்.
வாலிபரின் இடது கையில் கைக்கடிகாரம் ஒன்று கட்டப்பட்டுள்ளது மேலும் பேண்ட் சட்டை அணிந்திருந்தார். அதிலிருந்து எந்த ஒரு அடையாளமும் கண்டு பிடிக்க முடிய வில்லை.
வாலிபரின் முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. உடல் ஆற்றில் விழுந்து 2 நாட்கள் ஆன நிலையில் காணப்பட்டது. போலீசார் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது போலீசார் பல்வேறு கோணங்களில் அந்த வாலிபரை பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் உள்ள காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை செய்து வருகிறார்கள். பிரேத பரிசோதனையின் அறிக்கை வந்த பிறகுதான் இவர் எப்படி இறந்தார் என்று தெரியவரும். மேலும் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.