search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் புத்தக திருவிழா 14-ந்தேதி தொடக்கம் - கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    X

    நாகர்கோவிலில் புத்தக திருவிழா 14-ந்தேதி தொடக்கம் - கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

    • 14-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது
    • 22-ந்தேதி பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர் நர்தகி நட்ராஜ் பரதநாட்டிய நிகழ்ச்சி

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தக திருவிழா மற்றும் புகைப்பட கண்காட்சி தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவன நிர்வாகி களுடனான கலந்தாலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    பொதுமக்கள், இளைஞர்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் புத்தக வாசிப்பு திறனை ஊக்கப்படுத்தும் வகையில், 14-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் புத்தக கண்காட்சியில் 100-க்கும் அதிகமான அரங்குகள் வாயிலாக பொது அறிவு, தொழில்நுட்பம், அறிவியல், வரலாற்று சரித்திரம் உள்ளிட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட வுள்ளது.

    இப்புத்தக கண்காட்சியினை வருகிற 14-ந்தேதி தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வையிடுகிறார். 15-ந்தேதி திருக்குறள் பயில்வோம் என்ற தலைப்பிலும், 16-ந்தேதி வாழ்வை வளமாக்கும் வாசிப்பு என்ற தலைப்பிலும், 17-ந்தேதி கல்வி அதிகாரமளிக்கும் ஒரு கருவி என்ற தலைப்பிலும், 18-ந்தேதி வாசிப்பை நேசிப்போம் மற்றும் குமரி மண்ணும், மணமும் என்ற தலைப்பிலும், 19-ந்தேதி புத்தகம் என்ற தலைப்பிலும், 20-ந்தேதி நானும் என் படைப்புகளும் மற்றும் புத்தகம் பேசுகிறது என்ற தலைப்பிலும், 22-ந்தேதி புத்தகம் தரும் புத்தாக்கம் என்ற தலைப்பிலும், 23-ந்தேதி தமிழால் தலை நிமிர்வோம் என்ற தலைப்பிலும், இலக்கிய துறை சார்ந்த பல்வேறு ஆர்வலர்கள் கருத்துரை வழங்கவுள்ளார்கள்.

    மேலும், 15-ந்தேதி (சனிக்கிழமை) பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், ஊக்கமது கைவிடேல் என்ற தலைப் பிலும், 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பட்டி மன்ற புகழ் சுகிசிவம் சிகரங்களை நோக்கி என்ற தலைப்பிலும், 17-ந்தேதி நீயா, நானா புகழ் கோபிநாத், ஆவனா என்ற தலைப்பிலும், 21-ந்தேதி பட்டிமன்ற பேச்சாளர் முனை வர் பர்வீன் சுல்தானா உண்டு தீர்த்தோம், உழுது பார்த்தோம் என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்க உள்ளனர்.

    22-ந்தேதி பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர் நர்தகி நட்ராஜ் பரதநாட்டிய நிகழ்ச்சியும், 23-ந்தேதி சங்கரின் சாதக பறவைகள் இன்னிசை நிகழ்ச்சியும், 24-ந்தேதி பட்டிமன்ற புகழ் கலைமாமணி பேராசிரியர் முனைவர்.கு.ஞான சம்மந்தம் குழுவினரின் இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்பதற்கு பெரிதும் காரணம் படைப்பாளிகளா? படிப்பாளிகளா? என்ற தலைப்பில் மாபெரும் பட்டிமன்றம் நடைபெறுவதோடு, புத்தக கண்காட்சி நடைபெறும். ஒவ்வொரு நாளும் கன்னியாகுமரி மாவட்டத் திற்குட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சி, பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், களியல் ஆட்டம், சிலம்பாட்டம், களரி பைட், தோல்பாவை கூத்து, வில்லுப்பாட்டு உள்ளிட்ட மண்ணின் கலைகள் நடைபெறவுள்ளது.

    எனவே, மேற்குறிப்பிட்ட நாள்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பொது மக்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புத்தகத் திருவிழா மற்றும் புகைப்பட கண்காட்சியினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    புத்தக கண்காட்சியுடன் இணைந்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி என்ற புகைப்பட கண்காட்சியும் நடைபெறவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×